ஒரு மோடி ரசிகரின் கதை.. வாட்ஸ் ஆப்பில் ஒரு கலகல!
சென்னை: வாட்ஸ் ஆப்பில் ஒரு புது கலகல காமெடிக் கதை உலா வந்து கொண்டுள்ளது.
இது ஒரு மோடி ரசிகரின் கதை என்று தலைப்பிட்டு வரும் அந்தக் காமெடிக் கதையை
நீங்களும் படியுங்க
ஒரு மோடி ரசிகரின் கதை
14 மாதங்களுக்கு முன்பு நரேந்திர மோடி பிரதமர் ஆவதைக் கண்டு ஆனந்தக்
கூத்தாடி மயங்கி விழுந்து கோமாவுக்கு போன மோடியின் அதி தீவிர ரசிகர் ஒருவர்
நேற்று மயக்கத்திலிருந்து எழுந்தார்!
எழுந்தவர் அருகிலிருந்த மருத்துவரிடம்.......
- டாக்டர், ஊழலற்ற இந்தியாவுல இருக்கறது உங்களுக்கு எப்படி இருக்குது?
-
ராகுல்,ராபர்ட் வதேரா, சோனியா எல்லாரும் சிறையில் இருக்காங்களா? அல்லது
இத்தாலிக்குத் தப்பி ஓடிட்டாங்களா?
-
சுவிஸ் வங்கிகளில் இருந்து நம்ம நாட்டுக்கு எவ்வளவு கறுப்புப் பணம்
திரும்பி வந்தது?
-
ஒவ்வொரு இந்தியரும் மோடியிடமிருந்து 15 லட்சங்கள் பெற்ற பிறகு, ‘வறுமை'
சுத்தமா ஒழிஞ்சிருக்குமே?
-
அமெரிக்க டாலரின் மதிப்பு 35 ரூபாய்க்கு வந்துடுச்சா?
-
பெட்ரோல், டீசல், கேஸ், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு எல்லாம்
விலை
குறைஞ்சி எல்லோரும் சந்தோஷமா இருக்காங்களா?
-
பாகிஸ்தான் பயந்து நடுங்கி, தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்குத் திருப்பி
அனுப்பி இருக்கனுமே?
-
விவசாயிகள்கிட்ட இருந்து காங்கிரஸ் அபகரித்த நிலங்களை மோடி அவங்ககிட்டயே
திருப்பிக் கொடுத்திருப்பாரே? அதனால விவசாயிகள் எல்லாம் மகிழ்ச்சியா
இருப்பாங்களே?
மோடியின் ரசிகரிடமிருந்து சரமாரியாக இவ்வளவு கேள்விகளைச் சமாளிக்க
முடியாமல்.....
அய்யோ... பாவம்
மருத்துவர் கோமா நிலைக்குப் போய்விட்டார்!..
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/a-hilarious-whatsapp-story-on-modi-232651.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/a-hilarious-whatsapp-story-on-modi-232651.html
No comments:
Post a Comment