Tuesday 4 August 2015

Abdul Kalam

 
மிரட்டல் : 
 
பேப்பர் : ஏழ்மை காரணமாக தன் இளம் வயதிலேயே வீதி வீதியாக பேப்பர் போடும் வேலையை செய்தாராம் அப்துல் கலாம்..!

சராசரி : பள்ளியல் படிக்கும் போது, அப்துல் கலாம் ஒரு சராசரி மாணவர் தானாம்..!

கணிதம் : பெரிய அறிவியல் விஞ்ஞானியான அப்துல் கலாம், உண்மையில் பள்ளியில் இருந்தே, அறிவியலை விட கணித்த்தில் தான் அதிகம் கை தேர்ந்தவராம்.!


மிரட்டல் : காலாமின் சீனியர் கிளாஸ் ப்ராஜக்ட்டில் திருப்தி அடையாத 'டீன்' (DEAN) இன்னும் 3 நாட்களில் முடிக்கவில்லை எனில் காலாமின் உதவி தொகையை தர மாட்டேன் என்று மிரட்டினாராம்


சவால் : சொன்ன தேதிக்குள் ப்ராஜக்ட்டை முடித்து கொடுத்தாரம், அப்துல் கலாம்..!

பைலட் : ஒரு ராணுவ 'பைலட்'டாக ஆக வேண்டும் என்றுதான் கலாம் முதலில் ஆசைப்பட்டாராம்..!

இடம் : அதற்கான தேர்வில், முதலில் வரும் எட்டு பேர் மட்டுமே தகுதி பெறுவார்கள் என்ற நிலையில், ஒன்பதாவது இடத்தை பிடித்தாராம் - கலாம்..!

திருக்குறள் : அப்துல் காலம், ஒரு திருக்குறள் ( ஏ கிளாசிக் ஆஃப் குறள்ஸ்) அறிஞர் ஆவார், அவர் மேடை பேச்சுகளில் நிச்சயம் ஒரு திருக்குறளை நாம் கேட்கலாம்..!


 
அன்று : 
அன்று : இந்தியாவின் முதல் ராக்கெட் பாகங்கள் சைக்கிளில் வைத்தும், மாட்டு வண்டியில் வைத்தும் கொண்டு வரப்பட்டன, அதை பெரிய அளவில் கேலி செய்தன பிற நாடுகள்..!

இன்று : வளர்ந்த நாடுகள் அனைத்தும் இஸ்ரோவின் வளர்ச்சியை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறது, சில நாடுகல் இஸ்ரோவின் உதவியை நாடுகிறது. இதற்கெல்லாம் பிரதான காரணம் - டாக்டர் அப்துல் கலாம்..!


ஹெலிக்காப்பட்டர் :

ஹெலிக்காப்பட்டர் : 1960-இல் மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி-யில் படிப்பை முடித்த பின், டிபன்ஸ் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட்டில் இணைந்து இந்திய ராணுவத்திற்காக ஹெலிக்காப்பட்டர்களை உருவாக்கினார்..!


 
அரசு ஒப்புதல் : 1969-இல் அரசு ஒப்புதல் பெற்று, அந்த பணியில் மேலும் நிறைய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகளை இணைத்துக்கொண்டார்..!


எஸ்எல்வி-3 : இஸ்ரோவிற்கு இடமாற்றம் செய்த பின் அங்கு அவர் எஸ்எல்வி-3 க்கு ப்ராஜக்ட் டைரக்டராக பணியாற்றினார்..!


முதல் சாட்டிலைட் : எஸ்எல்வி 3 - இந்தியாவின் முதல் சாட்டிலைட் விண்கலமாகும்..!


பெரும் பலம் : 1980-களில் ஏவுகணை தயாரிப்பை முன்னடத்தினார். அந்த காலகட்டம் அக்னி, ப்ரித்திவ் போன்ற ஏவுகணைகள் ராணுவத்திற்கு பெரும் பலம் சேர்த்தன..!

ஆலோசகர் : பின் அப்துல் கலாம், அப்போதைய பிரதமரின் முக்கிய ஆலோசகராகவும் பணியாற்றினார்..!

பிரதமர் : பின் 2002-ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசு தலைவர் ஆனார்..!


உரை : ஐநா மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவர் ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும்..!


பாராட்டு : உங்கள் எளிமையும், செயல்திறனும் ஒப்பிலாதது என்று பல தேசங்களில் பாராட்டு பெற்றவர்..!

உறக்கம் : ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் கனவு காண சொல்லிக் கொடுத்த மாமனிதர், நேற்று (27 ஜூலை 2015) மீளா உறக்கத்தில் ஆழ்ந்தார்..!



No comments:

Post a Comment